TSK

TSK · Matthew 26:13

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.

‹ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.›

‹எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.›

பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: ‹நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்.›

இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.