TSK

TSK · Matthew 9:4

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்த நாளிலே பாழாய் கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட மக்களுக்கு விரோதமாகவும், மக்களிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும், மாடுகளையும், ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான மக்களுக்கு விரோதமாகவும், நீ உன்னுடைய கையைத் திருப்பும்படி,

நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

Mark 8:16 TSK

அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

Luke 5:22 TSK

இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: ‹உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?›

Luke 7:40 TSK

இயேசு அவனை நோக்கி: ‹சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார்› அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.

அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: ‹தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் அழிந்துபோகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தக் குடும்பமும் நிலைத்திருக்காது.›

John 6:61 TSK

சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: ‹இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?›

அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களைப் பார்த்து: ‹கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?›

மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: ‹யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா› என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: ‹என் ஆடுகளை மேய்ப்பாயாக› என்றார்.

Acts 5:9 TSK

பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.