வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
TSK
TSK · Proverbs 6:16
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது.
விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே.
மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.
மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.