TSK

TSK · Romans 12:1

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.

தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.

நான் என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழச்செய்வேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல மக்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம்.

அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?

தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?

நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,

ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

¶ இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;

¶ தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

¶ ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,

எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.

அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.

Titus 3:4 TSK

நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது,

ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.

ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும்.