அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
TSK
TSK · Zechariah 3:8
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
அவர் என்னை நோக்கி: நீ என் ஊழியக்காரன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
¶ இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதிற்கு நீதியின் கிளையை முளைக்கச்செய்வேன்; அவர் பூமியில் நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாக இருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் வேறு தேசத்திற்கு போவார்கள்.
அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன்.
நான் அவர்களுக்குக் புகழ்ச்சிபொருந்திய ஒரு நாற்றை எழும்பச்செய்வேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.
அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.
தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம்.