அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
TSK
TSK · Zechariah 9:4
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
¶ தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல.
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன்.
உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார்.