தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
TSK
TSK · Zechariah 9:7
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
¶ அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
¶ பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.
யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
இதோ, தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்தி, மக்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் மகன்களை பெரும் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் மகள்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
பிரேதக்குழிகளுக்கு அருகில் உட்கார்ந்து, பாழான இடங்களில் இரவுதங்கி, பன்றியிறைச்சியை சாப்பிட்டு, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் குழம்பை வைத்திருந்து:
அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
அதற்கு முன்பு உன்னுடைய கர்வத்தின் நாளிலே உன்னுடைய சகோதரியாகிய சோதோமின் பெயரை உன்னுடைய வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.
அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.