TSK

TSK · 2 Chronicles 4:1

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

¶ பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து:

சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான்.

ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.

¶ அதுமுதற்கொண்டு சாலொமோன், தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல்,

அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவிடம் போய்: நாங்கள் யெகோவாவின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதனுடைய அனைத்து தட்டுமுட்டுகளையும், சமுகத்து அப்பங்களின் மேஜையையும், அதின் அனைத்து தட்டுமுட்டுகளையும் தூய்மைப்படுத்தி,

பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன்னுடைய நான்கு பக்கங்களிலும் நான்கும் சதுரமுமாக இருக்கும்.