TSK

TSK · Amos 2:13

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage
Job 39:12 TSK

உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?

உங்கள் மாதப்பிறப்புகளையும், பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து சோர்ந்துபோனேன்.

நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய்.

நீ உன்னுடைய இளவயதின் நாட்களை நினைக்காமல், இவைகள் எல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன்னுடைய வழியின் பலனை உன்னுடைய தலையின்மேல் சுமரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.