TSK

TSK · Joel 3:5

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள்.

யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான்.

அங்கேயிருந்து யெகோவாவுடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் யெகோவா சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,

அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.

ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் மக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் செய்யாமல்,

அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; யெகோவா மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது யெகோவா வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.

பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை ருசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

¶ ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பவர்கள் உண்டு, அவர்கள் பரிசுத்தமாக இருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார்கள் தங்களுடைய சொத்துக்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.