TSK

TSK · Luke 22:62

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.

யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.

¶ நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

அப்பொழுது பேதுரு: ‹சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை› நினைத்துக்கொண்டு, வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.