TSK

TSK · 1 Chronicles 9:1

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

எருசலேமியர்கள் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பத்தாயிரம்பேரையும், சகல தச்சர்களையும் கொல்லர்களையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை மக்களைத் தவிர வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.

இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனிதர்களாகிய ஏழாயிரம்பேரையும், தச்சர்களும் கொல்லர்களுமாகிய ஆயிரம்பேரையும், போர்செய்யத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.

ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

Ezra 2:59 TSK

தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வீகத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:

அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:

¶ மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள்.

தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடியில்லாமல்போகும்; அது எளிதாகச் சிறைப்பட்டுப்போகும்.

காவற்சேனாதிபதியுடன் இருந்த கல்தேயரின் படைவீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.

¶ ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு: