TSK

TSK · 2 Chronicles 7:1

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

சூரியன் மறைந்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டுகளின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜூவாலையும் தோன்றின.

¶ அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது.

அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்து யெகோவாவைப் பணிந்துகொண்டனர்.

அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.

¶ சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

அப்பொழுது: யெகோவாவிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் எரித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக யெகோவாவை துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், யெகோவாவுடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது.

யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.

அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.

அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உள்முற்றத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, யெகோவாவுடைய மகிமை ஆலயத்தை நிரப்பினது.

¶ இப்படி நான் சொல்லி, ஜெபம்செய்து, என் பாவத்தையும் என் மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கைசெய்து, என் தேவனுடைய பரிசுத்த மலைக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

¶ இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.