அவர்கள் போய், யெகோவாவுக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது யெகோவா: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
TSK
TSK · 2 Samuel 3:35
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
சவுலும், அவனுடைய மகனான யோனத்தானும், யெகோவாவுடைய மக்களும், இஸ்ரவேல் குடும்பத்தார்களும், பட்டயத்தால் மரித்து போனதால் புலம்பி அழுது மாலைவரை உபவாசத்தோடு இருந்தார்கள்.
அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கச்செய்ய, அவனுடைய வீட்டிலுள்ள மூப்பர்கள் எழுந்து, அவன் அருகில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடு அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.
இறந்தவர்களுக்காக ஏற்படுகிற துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு ஆகாரம் பரிமாறப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவோ, ஒருவனுடைய தாய்க்காவோ துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள்.