TSK

TSK · Acts 10:28

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.

John 4:9 TSK

யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.

¶ அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.

அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,

Acts 11:9 TSK

இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: ‹தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம்› என்று சொல்லியது.

அதற்கு அவர்: ‹நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.›

இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை.