நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
TSK
TSK · Ecclesiastes 7:3
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரவழைத்து, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து அழைத்துவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளும் அவர்களில் இருப்பார்கள்; திரளான கூட்டமாக இவ்விடத்திற்குத் திரும்புவார்கள்.
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் வருவார்கள்; அவர்களும் யூதா மக்களும் ஏகமாக அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம்முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.
¶ நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
‹திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ;› ‹நீங்கள் பசியாக இருப்பீர்கள்.› ‹இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ;› ‹இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.›
அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,
இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
¶ என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,