TSK

TSK · Genesis 18:14

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

வருகிற வருடத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடு நான் என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.

ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

அவர்களைப் பார்த்து பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.

யெகோவாவுடைய தூதன் அந்த பெண்ணுக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.

அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.

Job 36:5 TSK

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.

யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த மக்களில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: ‹விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய்› என்றார்.

இயேசு அவர்களைப் பார்த்து: ‹மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும்› என்றார்.

Luke 1:18 TSK

அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.

Luke 8:50 TSK

இயேசு அதைக்கேட்டு: ‹பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்› என்றார்.

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.