TSK

TSK · Isaiah 1:2

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

நீங்கள் யோர்தானைக்கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் இல்லாமல், சீக்கிரமாக முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைக்கிறேன்; நீங்கள் அதிலே அதிக நாட்கள் இராமல் அழிக்கப்படுவீர்கள்.

நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

யெகோவாவின் வழியிலே நடவாமல், தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டான்.

¶ இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக்குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு.

இவர்கள் கலகமுள்ள மக்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், யெகோவாவுடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத மக்களாயிருக்கிறார்கள்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரச்செய்தவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடந்து செல்லாமலும் ஒரு மனிதனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்திரத்தில் எங்களை நடத்தினவருமாகிய யெகோவா எங்கேயென்று உங்கள் முற்பிதாக்கள் கேளாமல்,

பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன்.

தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.

நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாக நீ உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன்னுடைய இரத்தத்தில் கிடக்கிற உன்னைப் பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட பாலைவன இடங்களுக்கும், வெறுமையாக விடப்பட்ட பட்டணங்களுக்கும் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான அந்நியமக்களுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாகப்போனபடியினால்,

Micah 1:1 TSK

¶ யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை.

Micah 3:8 TSK

நானோ, யாக்கோபுக்கு அவனுடைய மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவனுடைய பாவத்தையும் அறிவிப்பதற்காக, யெகோவாவுடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

¶ மகன் தன் தகப்பனையும், வேலைக்காரன் தன் எஜமானையும் கனப்படுத்துகிறார்களே; நான் தகப்பனானால் எனக்குரிய கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் யெகோவா தமது நாமத்தை அசட்டைசெய்கிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டை செய்தோம் என்கிறீர்கள்.

¶ இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?