TSK

TSK · Isaiah 41:11

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

¶ நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார்.

அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.

இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்.

யெகோவாவிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள்.

உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே சாப்பிடக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான அனைவரும் அறிந்துகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.

உனக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமல்போகும்; உனக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது யெகோவாவுடைய ஊழியக்காரரின் உரிமையும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று யெகோவா சொல்கிறார்.

கேட்கவில்லை என்றால் தேசங்களையும் மக்களையும் அழித்துவிடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள்.

அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.