TSK

TSK · Isaiah 45:18

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

¶ பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.

நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வீட்டாராகிய மனிதர்கள் யாவரையும் பெருகச்செய்வேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், பாலைவனமான இடங்கள் கட்டப்படும்.