TSK

TSK · Isaiah 49:25

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்.

தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?

மக்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் இடத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் யெகோவாவுடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள்.

உன்னுடன் போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னுடன் போர்செய்த மனிதர்கள் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன மகளாகிய சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

இதோ, உனக்கு விரோதமாகக் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாகக் கூடுகிறார்களோ, அவர்கள் உன் ஆளுகைக்குள்ளாக வருவார்கள்.

யெகோவா யாக்கோபை மீட்டு, அவனிலும் பலவானுடைய கைக்கு அவனை விலக்கி விடுவிக்கிறார்.

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் ஏகமாக ஒடுக்கப்பட்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின அனைவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.

உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன்.

அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள்.

எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.

மேலான எருசலேமோ சுதந்திரம் உள்ளவள், அவளே நம்மெல்லோருக்கும் தாயானவள்.

பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.