நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
TSK
TSK · Isaiah 62:8
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
நான் என் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என்கிறேன்.
உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது.
வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சைத்தோட்டங்களை ஏற்படுத்தி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்.
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து மக்களுக்கு நான் வாக்கு கொடுத்து, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று வாக்களித்தேன்.