TSK

TSK · Mark 9:35

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.

‹உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.›

‹நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.›

‹உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.›