TSK

TSK · Numbers 16:32

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

“லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.

யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.

கோராகின் மகன்களோ சாகவில்லை.

ரூபன் வம்சத்தைச் சேர்ந்த எலியாபின் மகன்களான தாத்தானையும், அபிராமையும், அவர்களுடைய குடும்பங்களையும், அவர்களுடைய கூடாரங்களையும், இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருட்களையும் பூமி தன் வாயைத் திறந்து விழுங்கச்செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.

யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.

ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.