மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான்.
TSK
TSK · Numbers 25:13
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: “இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லோரும் அழிந்துபோகிறோம்.
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
அப்படியே யெகோவா சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் யெகோவாவுடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான்.
ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
நீங்களோ யெகோவாவின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய ஊழியக்காரர் என்பார்கள்; நீங்கள் தேசங்களின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.
வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாக இருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியம் செய்கிற லேவியரையும் பெருகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
அன்றியும், அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது.
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார்.
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.
நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.