அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை.
TSK
TSK · Zechariah 13:2
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, தெய்வங்களின் சிலைகளை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.
உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த தேசங்களோடு சேராமலும், அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை நினைக்காமலும், அவைகளைக்கொண்டு சத்தியம்செய்யாமலும், அவைகளைத் தொழுதுகொள்ளாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள்.
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்செய்து, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லோரும் எனக்குச் சோதோமைப்போலவும், அதின் குடிமக்கள் கொமோராவைப்போலவும் இருக்கிறார்கள்.
இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
ஒரு தீர்க்கதரிசி ஏமாற்றி ஒரு விஷயத்தைச் சொன்னான் என்றால், அப்படிப்பட்ட தீர்க்கதரிசியைக் யெகோவாகிய நானே ஏமாற்றமடையச்செய்தேன்; நான் அவனுக்கு எதிராக என்னுடைய கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் மக்களின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இது நான் இஸ்ரவேல் மக்களின் நடுவே என்றென்றைக்கும் வாழ்ந்திருக்கும் என்னுடைய சிங்காசனமும் என்னுடைய பாதபீடத்தின் இடமுமாக இருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என்னுடைய பரிசுத்தப் பெயரிலே தங்களுடைய மேடைகளில் தங்களுடைய வேசித்தனத்தினாலும் தங்களுடைய ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை.
நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான்.
மனிதரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், இடறுகிறதற்கு காரணமானவைகளையும் துன்மார்க்கர்களோடு வாரிக்கொண்டு, தேசத்தில் இருக்கிற மனிதர்களை அழிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
¶ ‹கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள்.›
‹நான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.›
¶ கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள்.
¶ பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்துப்பாருங்கள்.
அவன் அதிக சத்தமிட்டு: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது.
¶ ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.