TSK

TSK · 1 Chronicles 11:5

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று சொல்லி,

அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.

அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.

¶ அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரத் தலைமையில் உள்ளவர்களாகிய இஸ்ரவேல் மக்களிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடம் கூடிவரச்செய்தான்.

¶ பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.

சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.

யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.

அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.

¶ “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.

¶ பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன்.