நாம் பார்க்கும்படி, அவர் துரிதமாகத் தமது கிரியையைச் சீக்கிரமாக நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் தெரிந்துகொள்ளும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்கிறவர்களுக்கு ஐயோ,
TSK
TSK · Amos 5:18
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, மக்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான்.
அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்.
தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற தேசத்தாரைப்போல் அவர்கள் நாள்தோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
ஐயோ, அந்த நாள் பெரியது; அதற்கு இணையான நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி காப்பாற்றப்படுவான்.
மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
¶ சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும்.
யெகோவாவுடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது மிகவும் நெருங்கி வேகமாக வருகிறது; யெகோவாவுடைய நாள் என்கிற சத்தத்திற்குப் பராக்கிரமசாலி முதலாக அங்கே மனங்கசந்து அலறுவான்.
¶ இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும்.