¶ அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருட ஆட்சியின் நிசான் மாதத்திலே, திராட்சைரசம் ராஜாவிற்கு முன்பாக வைத்திருக்கும்போது, நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன்பு ஒருபோதும் அவருக்கு முன்பாக துக்கமாக இருந்ததில்லை.
TSK
TSK · Esther 3:7
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து,
ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும்,
பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான்.