TSK

TSK · Exodus 16:35

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.

அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.

உன் தேவனாகிய யெகோவா உன் கையின் செயல்களிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்திரத்தின்வழியாக நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருடங்களும் உன் தேவனாகிய யெகோவா உன்னுடன் இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.

இந்த நாற்பது வருடங்களும் உன்மேல் இருந்த ஆடை பழையதாகிப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.

¶ பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது யெகோவா அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்திற்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படச்செய்து, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.