TSK

TSK · Isaiah 37:22

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.

Job 16:4 TSK

உங்களைப்போல நானும் பேசமுடியும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையை ஆட்டவும் முடியும்.

தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.

யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,

ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.

என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?

Amos 5:2 TSK

இஸ்ரவேல் என்னும் கன்னிப்பெண் விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன்னுடைய தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளைத் தூக்கிவிடுகிறவர்கள் இல்லை.

மகளாகிய சீயோனே கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

¶ தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.