TSK

TSK · Isaiah 63:17

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார்.

தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்? உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.

என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.

இந்த மக்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்களுடைய காதுகளை மந்தப்படுத்தி, அவர்களுடைய கண்களை மூடிப்போடு என்றார்.

இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.