இன்னும் மூன்று நாட்களுக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிலிடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதனுடைய அர்த்தம்” என்று சொன்னான்.
TSK
TSK · 2 Samuel 21:10
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
தன் சிறையிருப்பின் ஆடையையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதம்வரை தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கம்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளுடன் சேர்ந்து, அவளுக்குக் கணவனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
இரவிலே அவன் உடலை மரத்திலே தொங்கவிடக்கூடாது; அந்த நாளிலேயே அதை அடக்கம் செய்யவேண்டும்; தூக்கில் போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் உன் தேசத்தைக் கறைப்படுத்தாதே.
சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.
பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான்.
அந்தந்தப் பருவத்தில் எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லுகிறதில்லை.
நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கிற மக்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; பிணந்தின்னுகிற எல்லாவித பறவைகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.
மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.
¶ பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது யெகோவா மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார்.