TSK

TSK · Genesis 10:2

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

¶ யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.

யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.

மனிதகுமாரனே, மேசேக் தூபால் இனத்தாரின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,

அப்பொழுது நீயும் உன்னுடன் திரளான மக்களும் வடதிசையிலுள்ள உன்னுடைய இடத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான கூட்டமாக இருந்து, எல்லோரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாக இருப்பார்கள்.

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும்.