TSK

TSK · Isaiah 13:22

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

அதை முள்ளம்பன்றிகளுக்குச் சொந்தமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை அழிவு என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

அதின் அரண்மனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் முட்புதர்களும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் குடியிருப்பும், ஆந்தைகளின் மாளிகையுமாயிருக்கும்.

வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும்.

தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.

அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார்.

தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார்.