TSK

TSK · Isaiah 5:1

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்;

இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்றுக்கொடுத்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் மக்களுக்குள்ளே இருக்கும்படி இதை அவர்களைப் பாடச்செய்யுங்கள்.

என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.

¶ நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.

அக்காலத்திலே நல்ல திராட்சைரசத்தைத் தரும் திராட்சைத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.

நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.

Mark 12:1 TSK

¶ பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ‹ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.›

John 15:1 TSK

¶ ‹நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.›