TSK

TSK · Leviticus 23:2

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்குக் யெகோவாவுக்குப் பண்டிகை” என்று கூறினான்.

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

அப்படியே மோசே யெகோவாவுடைய பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தான்.

உங்களுடைய மகிழ்ச்சியின் நாட்களிலும், உங்களுடைய பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது எக்காளங்களை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்களுடைய தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா” என்றார்.

பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பு நாளை நியமியுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே நியமித்தார்கள்.

எழுதியிருக்கிறபடி நீண்டகாலமாக அவர்கள் அதைக் கொண்டாடவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண் வரையுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் அறிவிப்புக் கொடுக்கத் தீர்மானம் செய்தார்கள்.

மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.

வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாக இருந்து, என்னுடைய நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என்னுடைய நியாயப்பிரமாணத்தையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கவேண்டும்.

Joel 1:14 TSK

பரிசுத்த உபவாசநாளை ஏற்படுத்துங்கள்; விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள்; மூப்பர்களையும் தேசத்தின் எல்லா குடிமக்களையும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கூடிவரச்செய்து யெகோவாவை நோக்கிக் கூப்பிடுங்கள்.

Jonah 3:5 TSK

அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள்.

John 5:1 TSK

¶ இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.