அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.
TSK
TSK · Leviticus 27:21
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
“ஒருவன் தன்னிடத்திலுள்ள மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது, சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும் யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.
சபிக்கப்பட்ட பொருட்களில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.