TSK

TSK · Romans 1:11

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.

அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கோவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான்.

Acts 16:5 TSK

அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.

இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றி நடந்து, எருசலேமுக்குப் போகும்படி ஆவியில் தீர்மானம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டும் என்று சொல்லி,

நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.

ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற,

உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே.

ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.

இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

உங்களுடைய இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் செயல்களிலும் உங்களை உறுதிப்படுத்துவாராக.

பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.

¶ உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.

ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து,