TSK

TSK · Jeremiah 21:1

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.

மெய்க்காப்பாளர்களின் தலைவன், பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரர்களையும் பிடித்தான்.

மல்கியாவின் மகனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மேரின் மகனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் மகனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும்,

ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,

¶ நேபுகாத்நேச்சாரின் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

¶ பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான்.

¶ இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் யெகோவா சொல்கிறார் என்றும்,

காவற்சேனாதிபதி முதன்மை ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.