TSK

TSK · Matthew 8:3

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

Back to passage

தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.

அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனிதனின் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுமுறை முழுகினபோது, அவனுடைய சரீரம் ஒரு சிறுபிள்ளையின் சரீரத்தைப்போல புதிதாகி, அவன் சுத்தமானான்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ‹நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;›

Mark 4:39 TSK

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: ‹சீராதே, அமைதியாக இரு› என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது.

Mark 7:34 TSK

வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: ‹எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம்.›

Luke 5:13 TSK

அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: ‹எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு› என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.

அவர்களை அவர் பார்த்து: ‹நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்› என்றார். அந்தப்படி அவர்கள் போகும்போது சுகமானார்கள்.

இவைகளைச் சொன்னபின்பு: ‹லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.›