TSK

TSK · Daniel 5:28

Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.

பத்திக்குத் திரும்பு

அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.

பயங்கரமான காட்சி எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்செய்து, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றுகைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியச்செய்தேன்.

ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும்.

மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.

தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சிக்காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது.

நீ கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;