அந்தத் திராட்சைச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
TSK
TSK · Numbers 17:8
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
¶ காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது.
அப்படியே யெகோவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான மரத்தை பட்டுப்போகச்செய்து, பட்டுப்போன மரத்தைத் தழைக்கச்செய்தேன் என்றும் விளைச்சலின் மரங்களுக்கு எல்லாம் தெரியவரும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று சொன்னார் என்று சொல் என்றார்.
அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார்.
அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.