TSK

TSK · Numbers 4:15

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும்.

அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

கோகாத்தின் சந்ததியாருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாக இருந்தது.

அவர்கள் உன்னுடைய காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கவேண்டும்; ஆனாலும் அவர்களும் நீங்களும் சாகாதபடி, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சேராமல்,

மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் மக்களுக்குச் சொல்லும்படி, யெகோவா யோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்து முடிக்கும்வரைக்கும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவே நின்றார்கள்; மக்கள் வேகமாகக் கடந்துபோனார்கள்.

அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடு இருந்து சுமக்கிற எல்லா லேவியர்களும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து கடந்துபோகும்வரை, அபியத்தார் அங்கேயே இருந்தான்.

அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.

பின்பு லேவியர்கள் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபடி தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினால் தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.