காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது.
TSK
TSK · Daniel 7:15
Treasury of Scripture Knowledge references in தமிழ் IRV.
நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது.
ராஜா அவர்களை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவின் அர்த்தத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது.
அவன் சொன்ன வார்த்தை இத்துடன் முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.
நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.