ஆர்த்தடாக்ஸ் விசுவாசப் பிரமாணம்

The Orthodox Creed

மெய்யாகவே, சர்வவல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை, வானத்தையும் பூமியையும் காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான யாவற்றையும் படைத்தவரை, நாங்கள் விசுவாசிக்கிறோம்.

ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, தேவனுடைய ஒரேபேறான குமாரனை, எல்லா யுகங்களுக்கும் முன்னே பிதாவிலிருந்து பிறந்தவரை விசுவாசிக்கிறோம். ஒளியிலிருந்து ஒளி, மெய்த்தேவனிலிருந்து மெய்த்தேவன்; பிறப்பிக்கப்பட்டவர், உண்டாக்கப்பட்டவர் அல்ல; பிதாவோடு ஒரே சாரமுள்ளவர்; அவர் மூலமாய் சகலமும் உண்டாயிற்று.

அவர் நமக்காகவும் நம்முடைய இரட்சிப்புக்காகவும் பரலோகத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலும் கன்னி மரியாளினாலும் மாம்சமாகி மனிதனானார்.

பொந்தியு பிலாத்துவின் காலத்தில் நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டார், பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார்; வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

பரலோகத்திற்கு ஏறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்க மகிமையோடு மறுபடியும் வருவார்; அவருடைய ராஜ்யத்திற்கு முடிவில்லை.

ஆம், பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம்; அவர் கர்த்தரும் ஜீவனைக் கொடுப்பவரும், பிதாவிலிருந்து புறப்படுகிறவரும்; பிதாவோடும் குமாரனோடும் கூட ஆராதிக்கப்பட்டு மகிமைப்படுகிறவரும்; தீர்க்கதரிசிகளின் மூலமாகப் பேசியவருமாவார்.

ஒரே பரிசுத்த, பொதுவான, அப்போஸ்தலிக்க சபையை விசுவாசிக்கிறோம். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறோம்.

மரித்தோரின் உயிர்த்தெழுதலையும் வரப்போகும் யுகத்தின் ஜீவனையும் எதிர்பார்க்கிறோம். ஆமென்.